தூக்கம் என்பது இறைவன் நமக்கு கொடுத்த ஒரு வரப்பிரசாதம். எந்த ஒரு சூழ்நிலையிலும் ஒரு மனிதன் படுத்தவுடன் தூங்க முடிந்தால் அவனை விட பெரிய ஆள் உலகத்தில் வேறு யாரும் இல்லை. தூக்கம் உடலுக்கும் மனதுக்கும் ஒரு சிறந்த மருந்து. தூங்கும் போது நமது எல்லா புலன்களுக்கும் ஒரு அமைதி கிடைக்கிறது.
அதனால் தான் தூங்கி எழுந்தவுடன் நம்மால் புத்துணர்ச்சியுடன் நமது வேலைகளை தொடங்க முடிகிறது. நல்ல இசை அல்லது நல்ல நினைவுகளுடன் தூங்க செல்வது நமது விடியலை இன்னும் சிறப்பாக மாற்றும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. தூக்கத்திற்கு இடையில் எந்த ஒரு தொந்தரவும் இல்லாமல் இருப்பது நல்லது.
தொடர்ந்து 14-16 மணி நேரங்கள் விழித்த பிறகு , கண்கள் சோர்வடைந்து தூக்கத்தை தேடுகிறது. ஒவ்வொரு ஆரோக்கியமான மனித உடலுக்கு 7-8 மணி நேரம் தூங்குவது அவசியம். இந்த நேரத்தின் அளவு வயதிற்கு ஏற்றபடி மாற்றம் பெறும். சிறு குழந்தைகள் 12-14 மணி நேரம் தூங்கினால் உடல் வளர்ச்சியடையும். ஆழ்ந்த தூக்கம் என்பது உடல் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது .
தூக்கமின்மையால் பாதிக்கப்படுவதற்கான காரணங்கள்:
1.உடல் வலி
2.கவலை மற்றும் பதற்றம்
3. இரவில் அதிகம் வியர்வை
4. மனஅழுத்தம் அல்லது மனோவியாதி