ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிறப்பாக செயற்படுகின்றார் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசி நேற்று தெரிவித்துள்ளார்.
பொது மக்களால் இதற்கான சான்றளிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
உண்மையை பேச வேண்டும் என்ற அடிப்படையில் தமது தனிப்பட்ட கருத்து மட்டுமல்லாமல், ஜனாதிபதி தொடர்பில் மக்களும் இதனையே கூறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
எவ்வாறாயினும், அரசாங்கக் கட்சியில் இணைந்துக் கொள்வது தொடர்பான திட்டங்கள் தம்மிடம் இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.