அம்பாறை – நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாட்டுப்பளை பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் மாட்டு வண்டியுடன் மோதுண்டதில் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் இன்று (15.04.2023) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நிந்தவூர் – சாய்ந்தமருது வேப்பையடி சேர்ந்த 35 வயதுடைய ஜமால்டின் ஹாரூன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அம்பாறையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி
