வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க, நாடாளுமன்றத்தில் இன்று (10) பிற்பகல் 1 மணிக்கு விசேட உரையொற்றை ஆற்றியதன் பின்னர், சற்றுமுன்னர் தன்னுடைய அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்தார்.
திறைசேரி முறிகள் மோசடி விவகாரத்தில், அமைச்சர் ரவி கருணாநாயக்கவும் தொடர்பு பட்டுள்ளார் என்று குற்றச்சாட்டி, திறைசேரி முறிகளை வழங்குதல் தொடர்காகப் பரீட்சித்துப் பார்க்கும் மற்றும் புலனாய்வு செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். இவற்றை, அடிப்படையாக வைத்தே அவர், தன்னுடைய அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.