• Sun. Oct 12th, 2025

17 வருடத்துக்கு முன்னர் கொடுத்த கடனை கேட்டவர் மீது தாக்குதல்

Byadmin

Jun 14, 2023


மட்டக்களப்பு தலைநகர் பகுதியில் தனது அண்ணனுக்கு 17 வருடத்துக்கு முன்னர் கடனாக கொடுத்த பணத்தை கேட்டு வீட்டுக்கு சென்ற போது அவர் மீது அவரது சகோதர்கள் கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடத்தியதில் அவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக அவரது அண்ணன், அக்கா மற்றும் அக்காவின் கணவர் அவரது மகள் ஆகிய 4 பேரை இன்று (14) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் படுகாயமடைந்த மட்டு. கல்லடி பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடையவர் தனது காணியை கடந்த 17 வருடங்களுக்கு முன்னர் விற்று அந்த பணத்தில் 6 1/2 லட்சம் ரூபாவை மூத்த சகோதரனுக்கு கடனாக வழங்கிய நிலையில் அவர் மத்திய கிழக்கு நாட்டுக்கு சென்று விட்டு கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் திரும்பி வந்துள்ளார்.

இந்த நிலையில் கொடுத்த கடணை கேட்டு சகோதரனின் வீட்டுக்கு சென்ற நிலையில் அவர் அங்கு இல்லாத நிலையில், அவர் தனது சகோதரியின் வீட்டில் இருப்பதாக அறிந்த அவர் சம்பவ தினமான நேற்று (13) மாலை 6 மணியளில் சகோதரியின் வீட்டுக்கு சென்ற நிலையில் அங்கு ஏற்பட்ட வாய் தர்க்கம் அதிகம் ஆனாதால் அவர் மீது அவரது சகோதரன், சகோதரி, சகோதரியின் கணவர் அவர்களது மகள் சேர்ந்து தாக்குதல் நடாத்தியதில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இச்சம்பவத்தில் தாக்குதலை மேற்கொண்ட இரு பெண்கள், இரு ஆண்கள் உட்பட 4 பேரை கைது செய்துள்ளதாகவும் அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *