• Sun. Oct 12th, 2025

வீட்டிலிருந்தபடியே இன்றுமுதல் கடவுச்சீட்டுக்களை பெறுவது எப்படி..? (முழு விபரம்)

Byadmin

Jun 15, 2023

கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ள Online ஊடாக விண்ணப்பிக்கும் செயற்றிட்டம் இன்று (15) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் 52 பிரதேச செயலகங்களில் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய கூறினார்.

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.immigration.gov.lk எனும் இணையத்தளத்திற்குள் பிரவேசித்து, தேவையான தகவல்களை வழங்கி கடவுச்சீட்டுக்காக விண்ணப்பிக்க முடியும் என அவர் குறிப்பிட்டார்.

மூன்று நாள் சேவை மற்றும் சாதாரண சேவைக்கமைய, கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் சாதாரண சேவைக்கு 5000 ரூபாவும், மூன்று நாள் சேவைக்கு 15,000 ரூபாவும் அறவிடப்படவுள்ளது.

இது தொடர்பான உத்தியோகபூர்வ நிகழ்வு ஹோமாகம பிரதேச செயலகத்தில் அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று நடைபெறவுள்ளது.

கடவுச்சீட்டை இலகுவாகப் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பத்தை பொதுமக்களுக்கு வழங்கும் நோக்கிலேயே இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடவுச்சீட்டினை பெற்றுக் கொள்வதற்காக கைவிரல் அடையாளங்களை பதிவு செய்வது தொடர்பிலான புதிய வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *