• Sun. Oct 12th, 2025

மனைவிக்கு பிரசவத்தின் போது, கணவருக்கு விடுமுறை

Byadmin

Jun 15, 2023

ஊழியர்களின் விருப்பத்திற்கு ஏற்ப வாரத்திற்கு ஐந்து நாள் மற்றும் நெகிழ்வான வேலை நேரங்களை அறிமுகப்படுத்தவுள்ளதாக தொழிலாளர் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

தொழிலாளர் அமைச்சில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில், 

தற்போதுள்ள தொழிலாளர் சட்டத்தின் குறைபாடுகளை திருத்தும் வகையில் புதிய தொழிலாளர் சட்ட சட்டமூலத்தை தொழிலாளர் ஆலோசனை சபையில் விரைவில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இலங்கையில் ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! வேலை நாட்களின் எண்ணிக்கை குறித்து வெளியான தகவல் | Sri Lanka Workers In Sri Lanka

சட்டமூலத்திற்கான பிரேரணை தயாரிக்கப்பட்டுள்ளது. இப்பிரேரணையின் படி ஆட்சேர்ப்பு அல்லது பணியிடத்தில் ஒரு ஊழியருக்கு எதிரான பாகுபாட்டைத் தடுக்க சட்ட விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

நிர்வாக கவுன்சில் கட்டளைச் சட்டத்தில் பணி நிலைமைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்த கடைகள் மற்றும் அலுவலகங்கள் சட்டத்தின் விதிகளுக்கு இடையே உள்ள வேறுபாடுகள் அகற்றப்பட்டு அனைவருக்கும் சமமான ஏற்பாடுகள் செய்யப்படும்.

பணியாளர்கள், அனைத்து பணியிட துன்புறுத்தல்கள் மற்றும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான சட்ட விதிகளை அறிமுகப்படுத்தவும் முன்மொழியப்பட்டுள்ளது.

பின்னர் ஊழியர்களின் விருப்பத்திற்கு ஏற்ப வாரத்திற்கு ஐந்து நாள் மற்றும் நெகிழ்வான வேலை நேரங்களை அறிமுகப்படுத்துதல், பகுதி நேர வேலையில் ஈடுபடுவதற்கு தொடர்புடைய சட்ட விதிகளை உருவாக்குதல் என்பன குறிப்பிடப்பட்டுள்ளன.

சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு, இரவில் பெண் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு சட்டம், தந்தைவழி விடுப்பு தொடர்பான சட்ட ஏற்பாடுகள் செய்யப்படும்.

இந்தக் குறிப்பின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட தொழிலாளர் சட்ட மாதிரி, தொழிலாளர் ஆலோசனைக் குழுவில் விரைவில் சமர்ப்பிக்கப்பட்டு, பின்னர் அது சட்டமாக்கப்படும் என சுட்டிக்காட்டியுள்ளார். 

அத்துடன், மனைவிக்கு பிரசவத்தின் போது கணவருக்கு விடுமுறை வழங்குவது தொடர்பிலும் புதிய சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்படவுள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *