• Sat. Oct 11th, 2025

மின்சார சபையின் புதிய முயற்சி!

Byadmin

Jun 27, 2023


மூன்று பிரதேசங்களில் உள்ள மின்சார பாவனையாளர்களுக்கு டிஜிட்டல் வடிவில் மின் கட்டண பட்டியலை வழங்கும் முறை ஜூலை 01 முதல் அமுல்படுத்தப்படவுள்ளது.

குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் ஊடாக இலத்திரனியல் பட்டியல் ஒன்றை இவ்வாறு வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.

தெஹிவளை, களனி மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் மின்சார பாவனையாளர்களுக்காக இந்த முறை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இதற்கு பின்வருமாறு SMS மூலம் பதிவு செய்யலாம்.

type REGfollowed by your A/C Number and send it to 1987

ஒன்லைன் ஊடாக பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்! – https://ebill.ceb.lk/EbillRegistration

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *