• Sun. Oct 12th, 2025

அஸ்வெசும திட்ட காலவகாசம் இன்றுடன் நிறைவு

Byadmin

Jul 10, 2023


அஸ்வெசும  சமூக நலத்திட்டம் தொடர்பான மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் (10) நிறைவடையவுள்ளது.

மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை சமர்பிப்பதற்கான கால அவகாசம் கடந்த மாத இறுதியுடன் முடிவடையவிருந்த போதிலும், பல தரப்பினரின் கோரிக்கைகளை கருத்திற் கொண்டு அதனை இன்று வரை நீடிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, அஸ்வெசும சமூக நலன் திட்டத்திற்காக சுமார் 09 இலட்சம் மேன்முறையீடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இதுவரை சுமார் 12,000 ஆட்சேபனைகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

எனினும் இன்றும் மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை முன்வைக்க முடியும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்பிறகு, மாவட்டச் செயலாளர்கள் மூலம் பெறப்படும் முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் உடனடியாக பரிசீலிக்கப்பட்டு இறுதி ஆவணம் வெளியிடப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *