• Sun. Oct 12th, 2025

சனத்தொகை கணக்கெடுப்பு – ஜனாதிபதி ரணில் வெளியிட்டுள்ள வர்த்தமானி

Byadmin

Jul 11, 2023

2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான குடியிருப்பு மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தமானி அறிவித்தலானது நாணய பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சரும் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ளது.

இறுதியாக சனத்தொகை மற்றும் குடியிருப்பு கணக்கெடுப்பு 2012 இல் நடத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் 15 ஆவது குடியிருப்பு மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021 ஆம் ஆண்டில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

எனினும் கொவிட் -19 தொற்றுநோய் காரணமாக அதை ஒத்திவைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.

இலங்கையில் முதலாவது சனத்தொகை மற்றும் குடியிருப்பு கணக்கெடுப்பு 1871 இல் நடத்தப்பட்டது, கடைசியாக சனத்தொகை மற்றும் குடியிருப்பு கணக்கெடுப்பு 2012 இல் நடத்தப்பட்டிருந்தது.

குடியிருப்பு மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பொதுவாக பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *