நேற்றிரவு (12) இறையடி எய்திய கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியின் இஸ்லாம் பாட ஆசிரியை மெளலவியா ஏ.டபிள்.யூ. ஜெரினா அவர்களது ஜனாஸா நல்லடக்கம் இன்று 13.07.2023 கல்முனை நூரணியா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அன்புக்குரிய ஆசிரியையே..!
நீங்கள் கற்பித்த மாணவர்களால் உங்களது இறுதி பயண இறுதி நிமிடம் வரை உம்மை சுமந்து செல்லும் காட்சி மனம் நெகிழும் காட்சியாக அமைந்தது.
பாடசாலையில் நீங்கள் பெற்ற சகல உணர்வுகளுக்கும் இந்த தருணம் உங்களை மன ஆறுதலான நிரந்தர உறக்கத்திற்கு இட்டு சென்றிருக்கும் என்பதில் எமக்கு எவ்வித சந்தேகமும் இல்லை.
எல்லாம் வல்ல இறைவா
எங்களால் முடிந்த விடயத்தினை எம் ஆசிரியைக்கு நன்றி பகிர்தலை செய்துள்ளோம்.
இனி உன் கருணை மிகு அந்தஸ்த்தினை
எம் அன்புக்குரிய ஆசிரியையைக்கு வாரி வழங்கிவைக்க உன்னை மனமுவந்து பிரார்த்திக்கின்றோம். ஆமீன்