• Wed. May 27th, 2026

ஐந்து வருடங்களில் நாட்டை முற்றாக மாற்றிவிட முடியாது

Byadmin

Aug 15, 2017

ஐந்து வருடங்களில் நாட்டின் பிரச்சினைகளை முழுமையாக தீர்த்துவிட முடியாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு பண்டபத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டார்.

நாடு குறித்த எதிர்கால திட்டமிடலும், ஒருங்கிணைந்த செயற்பாடும் அவசியம்.

அவ்வாறு இல்லையேல் நாட்டை அபிவிருத்தி பாதைக்குக் கொண்டுச் செல்ல முடியாது.

5 வருடங்களில் பராக்கிரமபாகுவாகிவிட முடியும் அல்லது  துட்டகைமுனுவாகி விட முடியும் என்று கூறிக் கொண்டு ஆட்சிக்கு வருகின்றனர்.

எனினும் ஐந்து வருடங்களில் நாட்டை முற்றாக மாற்றிவிட முடியாது என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *