“கொழும்பு – மீதொட்டமுல்ல பகுதியில் உள்ள குப்பைகளை, புத்தளம் – அருவக்காட்டுப் பிரதேசத்தில் கொட்டுவதற்கு அரசாங்கம் எடுக்கும் நடவடிகைகளுக்கு, எமது கட்சி ஒருபோதும் ஆதரவளிக்கப் போவதில்லை” என, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
புத்தளம் நகர இளைஞர்களுக்கும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கும் இடையிலான விசேட சந்திப்பு, புத்தளத்தில் அண்மையில் இடம்பெற்றது. இதன்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
“கொழும்பில் சேகரிக்கப்படும் குப்பைகளை, ரயில் மூலம் கொண்டு வந்து, புத்தளம் – அருவக்காட்டு பிரதேசத்தில் கொட்டுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
“இந்தத் திட்டம் தொடர்பில் அமைச்சரவையிலும் கலந்துரையாடப்பட்டபோது, எனக்கும் அமைச்சர் சம்பிக்கவுக்கும் இடையில், வாக்குவாதம் ஏற்பட்டது. நாங்கள் இருவரும் முரண்பட்டுக்கொண்டோம்.
“இதன்போது, அமைச்சர் கபீர் ஹாசிம் உள்ளிட்ட அமைச்சர்களும், இந்தத் திட்டத்துக்கு எதிராக, என்னோடு சேர்ந்து குரல் கொடுத்தனர்.
“இத்திட்டத்தை, புத்தளத்தில் நடைமுறைப்படுத்த, எமது கட்சி முழு எதிர்ப்பைத் தெரிவிப்பதாகவும் உறுதியாக ௯றினேன்.
“இதற்கு, புத்தளம் மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் அனுமதியைப் பெற்று, திட்டத்தை நடைமுறைப்படுத்த போவதாக, அமைச்சர் சம்பிக்க ரணவக்க, இதன்போது ௯றினார்.
“புத்தளம் மாவட்ட அபிவிருத்திக் குழு ௯ட்டத்தில், ஆனமடுவ, வென்னப்புவ போன்ற உறுப்பினர்களே பிரதிநிதித்துவப்படுத்துவதால், அபிவிருத்திக் குழுக் ௯ட்டத்தின் அனுமதியைப் பெற்றுக்கொள்வதில் பிரயோசனம் இல்லை என்றும், முதலில் புத்தளம் பிரதேச மக்களுடைய விருப்பத்தைக் கேட்டுக்கொள்ள வேண்டும் எனவும் ௯றினேன்.
“எனவே, உலமாக்கள், சிவில் அமைப்புகள், இளைஞர் அமைப்புகள் என அனைவரும் இந்த விடயத்தில் மிகவும் ஒற்றுமையாகச் செயற்பட வேண்டும். ஒற்றுமையாகச் செயற்படுவதன் மூலமே, சகல விடயங்களிலுல் வெற்றிபெற முடியும்” என்றார்.
-ரஸீன் ரஸ்மின் –