• Sun. Oct 12th, 2025

பொய்யான தகவலை வெளியிட்ட இணையதளங்களுக்கு எதிராக TRC யில் முறைப்பாடு

Byadmin

Aug 15, 2017

அம்பாரை மாவட்டத்தில் சம்மாந்துறை பிரசேத்தில் க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றிய முஸ்லிம் மாணவி ஒருவர் புளுடூத் ஹெட் செட்டுடன் பிடிக்கப்பட்டு பொலிஸில் ஒப்படைக்கப்பட்டதாக வெளியாகிய செய்தி முற்றிலும் பொய்யான செய்தி என ஊர்ஜிதமாகியுள்ள நிலையில்,

இந்த பொய்யான தகவல்களை பரப்பிய இணையதளங்களுக்கு எதிராக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம் நாளை முறைப்பாடு ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக அம்பாறை மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அரசியல் பிரமுகரும் தென் கிழக்கு பல்கலைகழகத்தின் முன்னாள் உபவேந்தருமான இஸ்மாயில் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

இது முஸ்லிம் மாணவிகளுக்கும் எமது சமுக்கத்திற்கும் எதிராக வேண்டுமென்றே மேற்கொண்டு வருகின்ற சதித்திட்டமுமாகும்.

இவ்வாறான எந்தவொரு சம்பவமும் இடம்பெறாத நிலையில் வேண்டுமென்றே உண்மைக்கு புறம்பாக கட்டவிழ்த்து விடப்படப்படுள்ள பொய்யான தகவல் என்பதை நான் ஊர்ஜிதப்படுத்திக்கொண்டேன்.

இது தொடர்பில் எமது  கட்சியின் சட்ட ஆலோசகர் றுஷ்டி ஹபீப் அவர்களுடன் இந்த விடயத்தை சட்ட ரீதியில் அணுகுவதற்கு ஏற்கனவே கலந்துரையாடியுள்ளேன் என குறிப்பிட்டார்.

அதேவேளை இந்த செய்தி தொடர்பிலான உண்மைத்தன்மையை உறுதிப்படுத்திக்கொள்ள முன்னதாக முன்னாள் உபவேந்தர் இஸ்மாயில் அவர்கள் பல்வேறு பட்ட தரப்புக்களை எம்மோடு தொடர்புபடுத்தியிருந்தமைக்காக நாம் எமது நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *