இலங்கையில் 1700க்கும் மேற்பட்ட எயிட்ஸ் நோயாளிகள் இனம் காணப்படவேண்டியுள்ளதாக அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
இலங்கையின் தேசிய பால்வினை நோய்கள் மற்றும் எயிட்ஸ் நோய்த்தடுப்பு மருத்துவப் பிரிவு இத்தகவலை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள பால்வினை நோய்கள் மற்றும் எயிட்ஸ் நோய் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் மருத்துவர் சிசிர லியனகே தொடர்ந்தும் தெரிவிக்கையில், தற்போதைய நிலையில் 2200க்கும் மேற்பட்ட எயிட்ஸ் நோயாளிகள் இனம் காணப்பட்டு முறையான சிகிச்சைகளைப் பெற்று வருகின்றனர்.
எனினும் இலங்கையில் 3700 வரையான எயிட்ஸ் நோயாளிகள் இருக்கலாம் என்று கருதப்படுகின்றது. குறைந்த பட்சம் 1700க்கும் மேற்பட்ட எயிட்ஸ் நோயாளிகள் இனம் காணப்பட வேண்டிய நிலையில் உள்ளனர்.
அவ்வாறானவர்களை இனம் காண்பதற்கும், எயிட்ஸ் நோய் தொடர்ந்தும் பரவாமல் இருப்பதற்கும் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்றும் மருத்துவர் சிசிர லியனகே தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.