நீர்கொழும்பில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் சற்று முன்னர் ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாக எரிந்து கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீர்கொழும்பில் இருந்து கட்டுவாப்பிட்டிய செல்லும் பாதையின் பிரதான சந்தியில் அமைந்துள்ள வீனஸ் ஓட்டோ வேர்க்ஸ் எனும் நிறுவனமே இவ்வாறு தீ விபத்துக்குள்ளாகியுள்ளது.
தீயை அணைப்பதற்காக நீர்கொழும்பு நகரசபையின் தீயணைப்புப் பிரிவினர் தற்போது கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சேதம் மற்றும் உயிரிழப்புகள் தொடர்பான விபரங்கள் எதுவும் இதுவரை வௌியாகவில்லை.
சம்பவம் தொடர்பான தகவல் சேகரிப்பு மற்றும் மேலதிக விசாரணைகளுக்காக விசேட பொலிஸ் குழுவொன்றும் சம்பவ இடத்திற்கு வருகை தந்துள்ளனர்.