• Sun. Oct 12th, 2025

திமிங்கிலத்தின் வாந்தியுடன் பிடிபட்ட 2 பேர்

Byadmin

Jul 21, 2023

மிகவும் பெறுமதியான அம்பர் எனப்படும் திமிங்கிலத்தின் வாந்தியுடன் 2 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாத்தறை தெவிநுவர பிரதேசத்தில் வைத்து 08 கிலோ அம்பருடன் சந்தேகநபர்கள் குற்றப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹம்பாந்தோட்டை இராணுவப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மிரிஸ்ஸ பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடைய ஒருவரும் வெலிகம பிரதேசத்தை சேர்ந்த 34 வயதான ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிடைத்த தகவலுக்கு அமைய தென் மாகாண பிரதி பொலிஸ் மா அதிபரின் கீழ் இயங்கும் மாத்தறை குற்றத்தடுப்பு பிரிவு புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் இணைந்து இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

திமிங்கலத்தின் உடலில் இருந்து பெறப்படும் அம்பர் உலகில் விலை உயர்ந்த வாசனை திரவியத்தை தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது,

மேலும் இலங்கையில் அம்பரை விற்பனை செய்ய மற்றும் தம்வசம் வைத்திருக்க தடைசெய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக கந்தர பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், மாத்தறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *