• Sun. Oct 12th, 2025

ஆண் பிள்ளைகள் படிப்பில் வீழ்ச்சி – பெண் வைத்தியர்களே அதிகமாக இருப்பார்கள்

Byadmin

Jul 22, 2023

இலங்கையில் மருத்துவ பீடங்களுக்கு அனுமதிப்பவர்களில் 73 வீதமானவர்கள் பெண்கள் என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

கடந்த 30 வருடங்களின் தொடர்புடைய வருடாந்த தரவுகளை பகுப்பாய்வு செய்வதன் மூலம், இதனை ஊகிக்க முடியும் என சுகாதார அமைச்சின் மனிதவளப் பிரிவின் முன்னாள் தலைவரும், பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தொழில் மற்றும் திறன்கள் பிரிவின் பணிப்பாளருமான கலாநிதி திலீப் டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்காக 1990ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரையிலான பல்கலைக்கழகங்களின் அறிக்கைகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஆண்களை விட பெண்களின் சதவீதம் ஆண்டுதோறும் அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது. 1990 ஆம் ஆண்டில், மருத்துவ பீடங்களில் நுழைந்த பெண் மாணவர்களின் எண்ணிக்கை 43 சதவீதமாக இருந்தது.

2020ல் அந்த எண்ணிக்கை 64 சதவீதமாக உயர்ந்துள்ளதாக பேராசிரியர் சுட்டிக்காட்டுகிறார். இதன்படி, முப்பது வருடங்களில் மருத்துவ பீடங்களுக்குச் செல்லும் பெண் மாணவர்களின் வீதம் 21 வீதத்தால் அதிகரித்துள்ளது.

ஆண் பிள்ளைகள் படிப்பில் காட்டும் ஆர்வம் படிப்படியாகக் குறைந்து வருவதே இதற்குக் காரணம். கடந்த 20 ஆண்டுகளில், தோல் மருத்துவர்களில் 64 சதவீதம் பேர் பெண்கள் ஆவர்.

83 வீதமான நுண்ணுயிரியல் பெண் நிபுணர்கள் இருப்பது தெரியவந்துள்ளதாக கலாநிதி திலிப் டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *