• Sun. Oct 12th, 2025

ஹொறவ்பொத்தானை; 12 வயது சிறுமி குழந்தை பிரசவிப்பு

Byadmin

Jul 25, 2023

ஹொரவ்பொத்தான பிரதேசத்தில் 12 வயது சிறுமி குழந்தை பெற்ற நிலையில் அவரது சித்தப்பா தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார்.

மனைவியின் மூத்த சகோதரியின் 12 வயது மகளை பலாத்காரத்திற்கு உட்படுத்திய வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்நிலையில், சிறுமி பிரசவித்த குழந்தையின் இரத்தத்தையும் சந்தேக நபரின் இரத்தத்தையும் பரிசோதிப்பதற்காக பொலிஸார் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதையடுத்து சந்தேக நபர் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹொரவ்பொத்தான ஒலுகஸ்கடவல பகுதியை சேர்ந்த சமன்சிறி என்ற 47 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

சிறுமியை பலாத்காரம் செய்த நபர் தனது முந்தைய திருமணத்தின் மனைவியை கைவிட்டு விட்டு இரண்டாவது திருமணம் செய்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனால், தனது மனைவியின் சகோதரியின் 12 வயது மகளை இரண்டாவது திருமணத்தில் இருந்து பலாத்காரம் செய்துள்ள நிலையில் அவருக்கு குழந்தை பிறந்துள்ளது.

இது தொடர்பாக வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி குழந்தையின் இரத்த மாதிரிகள் மற்றும் சந்தேக நபரின் இரத்த மாதிரிகளை சட்ட வைத்திய அதிகாரிக்கு பரிசோதனைக்காக அனுப்ப முயற்சித்த போது சந்தேக நபர் தற்கொலை செய்து கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *