• Sat. Oct 11th, 2025

ஹோட்டல் முகாமைத்துவத் துறையில் 13000 பயிற்சியாளர்களுக்கு தொழில் வாய்ப்பு

Byadmin

Jul 31, 2023

ஹோட்டல் முகாமைத்துவத் துறையில் 13000 பயிற்சியாளர்களுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சர்வதேச கப்பல் நிறுவனங்கள், திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சுடன் உடன்படிக்கைக்கு வந்துள்ளன.

நிறுவனப் பிரதிநிதிகள் குழுவொன்று கடந்த வாரம் இலங்கைக்கு வந்து அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுடன் தமது பயணிகள் கப்பல்களில் உள்ள தொழில் வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடினர்.

ஹோட்டல் முகாமைத்துவ பயிற்சிக்காக நாட்டில் உள்ள வசதிகள் குறித்து திருப்தியடைவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பயிற்சிக்கான பாடத்திட்டமும் அந்த நிறுவனங்களால் வழங்கப்பட உள்ளது. அதற்கமைய, அடுத்த சில மாதங்களுக்குள் பயிற்சிக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்ள அமைச்சு தயாராகி வருகிறது.

இது தொடர்பாக, கப்பல் நிறுவனங்களுக்கும் அமைச்சகத்துக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தமும் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் கையெழுத்திடப்பட உள்ளது.

இதேவேளை வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை இலக்காக கொண்டு தொழிற்பயிற்சி அதிகார சபையினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள பயிற்சி நெறிகளில் சுமார் 5000 பேர் கலந்து கொண்டுள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *