• Sat. Oct 11th, 2025

சிறுவன் ஹம்தி மரணம் – இதுவரை வெளியான அனைத்து தகவல்களும், ஆதாரங்களும் ஒரே பார்வையில்….

Byadmin

Jul 31, 2023

நிலையிலிருந்த சிறுவன், விஷக் கிருமி உடலில் புகுந்ததால் ஏற்பட்ட மரணம் என வழமையாக விடுக்கும் அறிக்கையை மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டது.

மருத்துவமனையின் இந்த செயற்பாடு தகவல் கிடைத்தவுடன் ஶ்ரீலங்கா முஸ்லிம் மீடியா நெட்வர்க் மற்றும் ஶ்ரீலங்கா முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் இது தொடர்பில் ஊடகங்கள் மற்றும் அரசியல்வாதிகள் ஆகியோரைத் தொடர்பு கொண்டு விபரங்களை எடுத்துக் கூறினர். அதனையடுத்து ஊடகங்களில் இந்த விடயம் பேசுபொருளானது.

ஊடகங்கள் சிறுவனுக்கு நடந்த அநீதிக்காக குரல் கொடுக்க ஆரம்பித்தவுடன் மருத்துவமனை பணிப்பாளர், ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் சிறுவனின் சிறுநீரகங்கள் ஒன்றோடொன்று இணைந்திருந்ததாக குறிப்பிட்டிருந்தார்.

இரண்டு சிறுநீரகங்களும் வெவ்வேறாக இல்லாமல் அதன் கீழ் பகுதிகள் ஒன்றோடொன்று இணைந்திருக்கும் நிலை Horseshoe என்று அழைக்கப்படுகிறது. மருத்துவமனை பணிப்பாளர் கூறுவது போன்ற அமைப்பில் சிறுவனின் சிறுநீரகங்கள் இருக்கவில்லை என்பதற்கு ஏற்கனவே எடுக்கப்பட்ட சிறுவனின் மருத்துவ பரிசோதனை அறிக்கைள் சான்றுகளாக இருக்கின்றன்றன.

அவ்வாறு சிறுநீரகங்கள் இரண்டும் ஒன்றோடொன்று இணைந்திருந்து அவை அகற்றப்பட்டிருந்தால், சத்திர சிகிச்சையின் பின்னர் மருத்துவ (Histopathology) பரிசோதனைக்கு இடது பக்க சிறுநீரகம் மட்டும் ஏன் அனுப்பப்பட்டது என்பதற்கான விளக்கத்தை மருத்துவமனையின் பணிப்பாளர் தெளிவு படுத்த வேண்டுமென சிறுவனின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

சத்திர சிகிச்சையின் பின்னர் கடந்த 25ம் திகதி டிசம்பர் மாதம் 2022 அன்று எடுக்கப்பட்ட குறித்த பெத்தொலொஜி அறிக்கையில் சிறுவனின் அகற்றப்பட்ட இடது சிறுநீரகம் பற்றிய தகவல்கள் மட்டுமே இருக்கின்றன. வலது பக்க சிறுநீரகம் தொடர்பான எந்த தகவல்களும் அந்த மருத்துவ அறிக்கையில் இல்லை. அப்படி இரண்டு சிறுநீரகங்கள் ஒன்றாக இணைந்திருந்து சத்திரசிகிச்சையின் போது தவறுதலாகவோ, தவிர்க்க முடியாமலோ அகற்றப்பட்டிருந்தால் அது பற்றி மருத்துவ அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால் அப்படியான குறிப்புகள் ஏதும் அவற்றில் இல்லை.

இந்நிலையில் சிறுவனின் உடலை பெற்றுக் கொள்வதிலும் சிக்கல்கள் ஏற்பட்டது. இதனையடுத்து சனிக்கிழமை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, பொரளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, லேடி ரிட்ஜ்வே மருத்துவமனைப் பணிப்பாளர் ஆகியோருடன் ஶ்ரீ லங்கா முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் ஊடகவியலாளர் தொடர்புகளை ஏற்படுத்தி, தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டார்

இந்நிலையில் நீண்ட இழுபறிக்குப் பின்னர் நேற்று மாலை சிறுவனின் ஜனாசா விடுவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு, மருத்துவக் கவுன்சில், சுகாதார அமைச்சு ஆகியவற்றில் முறைப்பாடுகளை மேற்கொள்ள ஶ்ரீ லங்கா முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பு முயற்சிகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *