• Sat. Oct 11th, 2025

ரஷியாவில் இளம்பெண்ணை கடத்தி 14 ஆண்டுகளாக பாலியல் அடிமையாக வைத்திருந்த கொடூரன்

Byadmin

Aug 3, 2023

ரஷியாவின் செல்யாபின்ஸ்க் பகுதியில் இளம்பெண்ணை வீட்டில் அடைத்து, 14 ஆண்டுகளாக பாலியல் அடிமையாக வைத்திருந்து சித்ரவதை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 2009ம் ஆண்டு செஸ்கிடோவ் என்ற நபர், எகடெரினா என்ற 19 வயது இளம்பெண்ணை சந்தித்துள்ளார். அப்போது அவரிடம் ஆசை வார்த்தைகள் பேசி வீட்டிற்கு மது அருந்த வரும்படி அழைத்துள்ளார். அங்கு சென்றபின் அவரை வெளியே அனுப்பாமல் தொடர்ந்து வீட்டுக்குள்ளேயே பாலியல் அடிமையாக வைத்து தன் காம இச்சையை தீர்த்துள்ளார். இவ்வாறு 14 ஆண்டுகள் கொடுமையை அனுபவித்த அந்த பெண், சமீபத்தில் அந்த வீட்டில் இருந்து தப்பி வந்துள்ளார். செஸ்கிடோவின் மனநிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, வீட்டில் இருந்து தப்பி வந்துள்ளார். இதற்கு செஸ்கிடோவின் தாயார் உதவி செய்ததாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இப்போது 33 வயதாகிறது. தப்பி வந்த அவர் தனக்கு நேர்ந்த கொடுமைகளை விளக்கமாக கூறி போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், செஸ்கிடோவ் 2009ம் ஆண்டு முதல் தன்னை 1000க்கும் மேற்பட்ட முறை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், படுக்கை அறையைவிட்டு வீட்டு வெளியே வந்து வீட்டு வேலையை செய்வதாக இருந்தாலும், கத்தி முனையில் மிரட்டி வைத்திருந்ததாகவும் கூறி உள்ளார். மேலும், சின்னச்சின்ன பிரச்சனைகளுக்கெல்லாம் கடுமையாக அடித்து சித்ரவதை செய்ததாகவும் கூறி உள்ளார். இதுதவிர தன்னைப் போன்று வேறு ஒரு பெண்ணையும் வீட்டுக்கு அழைத்து வந்ததாகவும், 2011ல் சண்டையின்போது அந்த பெண்ணை கொலை செய்ததாகவும் அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார். இந்த புகாரிபேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செஸ்கிடோவை கைது செய்துள்ளனர். அவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தியபோது செக்ஸ் பொம்மைகள் ஆபாச படங்கள் கொண்ட சி.டி.க்களை கைப்பற்றினர். செஸ்கிடோவின் வீட்டின் நிலவறையில் இருந்து மனித உடல் பாகங்கள் கைப்பற்றப்பட்டதாக விசாரணைக்குழு உறுதி செய்துள்ளது. கைது செய்யப்பட்ட செஸ்கிடோவ் மனநல காப்பகத்தில் சேர்க்கப்பட்டு போலீசாரின் கண்காணிப்பில் உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *