• Sun. Oct 12th, 2025

மின் கட்டணம் மற்றும் மின் வெட்டு தொடர்பில் விளக்கம்

Byadmin

Aug 7, 2023


திட்டமிடப்பட்ட மின்வெட்டுகள் ஏதுமின்றி, ஆண்டு முழுவதும் தடையின்றி மின்சாரத்தை வழங்குவதற்கு இலங்கை மின்சார சபை  திட்டமிட்டுள்ளதாக விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் கஞ்சன விஜயசேகர டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
ஊடகங்களில் ஊகிக்கப்படுவது போல் மின்சார கட்டணம்  திருத்தம் மேற்கொள்ளப்படாது எனவும் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் மின்சார கட்டணத்தை ஆண்டுக்கு இருமுறை திருத்துவது என்பதே அரசின் கொள்கை முடிவு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது உள்ள மின் நிலையங்களின் முழு கொள்ளளவும் மின் உற்பத்திக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது.
திட்டமிடப்பட்ட மின்வெட்டு இல்லாமல் தொடர்ந்து மின்சாரம் வழங்குவதை உறுதிசெய்வது மற்றும் விவசாயத்திற்கு விடக்கூடிய அதிகபட்ச நீரை உறுதி செய்வது தொடர்பான விடயங்கள் இன்று அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளது.
அடுத்த 12 மாதங்களுக்கு மின் உற்பத்தி, விவசாயத்திற்கான நீர் வெளியீடு, நீர் மின் திறன், அனல் மின்சாரம்  தொடர்பான விபரங்கள் அமைச்சரவையில் பகிரப்பட்டு விவாதிக்கப்படவுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *