• Sun. Oct 12th, 2025

பேர்சி அபேசேகர தொடர்பில் பரப்பப்படும் தகவல் பொய்யானது

Byadmin

Aug 8, 2023

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி மற்றும் தீவிர ஆதரவாளராக கருதப்படும் பேர்சி அபேசேகர தொடர்பில் பரப்பப்படும் தகவல் பொய்யானது என அவரது குடும்ப வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தற்போது 87 வயதாகும் பேர்சி அபேசேகர இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி ரசிகராகவும், அணியின் ஊக்குவிப்பாளராகவும் கருதப்படுகிறார்.

இலங்கை கிரிக்கெட் வீரர்களை ஊக்கப்படுத்த தேசியக் கொடியை ஏந்தி மைதான எல்லைக்குள் படையெடுத்து வரும் பேர்சி அபேசேகர உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமாகியுள்ளார்.

சில சந்தர்ப்பங்களில், மிகவும் கடினமான சூழ்நிலையிலும், இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள வீரர்களுக்கு ஆதரவாக நின்று அவர் செய்த பணி மிகப்பெரியது.

பின்னர், அவரைப் பின்பற்றி, கிரிக்கெட் ஆதரவாளர்கள் இலங்கை கிரிக்கெட் அணியைச் சுற்றி திரண்டாலும், அவர்களில் எவராலும் பேர்சி அபேசேகரகவிற்கு ஈடுகொடுக்க முடியவில்லை.

இந்நிலையில், தற்போது உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் பேர்சி அபேசேகர விரைவில் குணமடைய வேண்டும் என கிரிக்கெட் ரசிகர்கள் பிரார்தனை செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *