• Sun. Oct 12th, 2025

கற்பிட்டிக்கு வந்த அரியவகை திமிங்கலம்

Byadmin

Aug 9, 2023

புத்தளம் மாவட்டம், கற்பிட்டி இப்பந்தீவு பகுதியில் 30 அடி நீளம் உடைய திமிங்கலம் ஒன்று நேற்றைய தினம் (08-08-2023) உயிருடன் கரையொதுங்கியுள்ளது.

இதேவேளை, உயிருடன் கரையொதிங்கிய திமிங்களத்தைக் கண்ட மீனவர்கள் கற்பிட்டி வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்குத் தகவலை வழங்கியுள்ளனர்.

தகவலறிந்து விரைந்து வந்த வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கற்பிட்டி விஜய கடற்படையினரின் உதவியுடன் திமிங்களத்தை ஆழமான பகுதியில் விடுவிக்கப்பட்டதாக வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்தனர்.  

இந்த திமிங்கலம் Bryce’s Whale இனத்தைச் சார்ந்தது என கற்பிட்டி வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *