உத்தியோகபூர்வ தேர்தலை செப்டெம்பர் 16ஆம் திகதி நடத்த இலங்கை கால்பந்து சம்மேளனம் தீர்மானித்துள்ளது.
கால்பந்தாட்ட உலகக் கிண்ணத் தகுதிச் சுற்றுப் போட்டிகளில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பை பெறுவதற்காக இவ்வாறு தேர்தலை நடத்துவதற்கான திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உலகக் கிண்ண தகுதிச் சுற்றுப் போட்டிகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், அதற்கு 10 நாட்களுக்கு முன்னதாக உத்தியோகபூர்வ தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று சர்வதேச கால்பந்து சம்மேளனம், இலங்கைக்கு நிபந்தனை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை கால்பந்து சம்மேளன தேர்தல் திகதி நிர்ணயம்
