லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று (12) இடம்பெற்ற Jaffna Kings அணிக்கு எதிரான போட்டியில் B Love Candy அணி வெற்றிபெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற Be Love Candy அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட இருபது ஓவர்களில் 08 விக்கெட்டுக்களை இழந்து 178 ஓட்டங்களை பெற்றது.
Be Love Candy அணி சார்பில் மொஹமட் ஹரிஸ் 81 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
பதிலுக்கு 179 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய Jaffna Kings அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 170 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது.
ஜப்னா அணியை வீழ்த்திய கண்டி அணி
