• Sat. Oct 18th, 2025

உதயமாகவுள்ள கறுவா திணைக்களம்

Byadmin

Aug 16, 2023

கறுவா அபிவிருத்திக்கான புதிய திணைக்களம் ஒன்றை ஸ்தாபிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. சிறு ஏற்றுமதி பயிராக அந்நிய செலாவணியை ஈட்டுவதற்காக கறுவாப்பயிர் வழங்கிவரும் பங்களிப்பை கருத்திற்கொண்டு, அதனை வணிகப் பயிராக மேம்படுத்த வேண்டிய அவசியத்தை 2023ஆம் ஆண்டுக்கான பாதீட்டு திட்ட யோசனையில் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்

அதற்கமைய, கறுவா உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கு தேவையான வசதிகளை வழங்குதல், தரப் பண்பை அதிகரித்தல், பெறுமதி சேர்த்தல், உற்பத்தியை பன்முகப்படுத்தல் போன்ற நடவடிக்கைகளுக்காக இந்த திணைக்களம் ஸ்தாபிக்கப்படவுள்ளது.

கறுவா அபிவிருத்தி திணைக்களம் என்ற பெயரில் குறித்த திணைக்களத்தை ஸ்தாபிப்பதற்கான யோசனையை ஜனாதிபதி மற்றும் பெருந்தோட்டத்துறை அமைச்சர் ஆகியோர் சமர்ப்பித்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *