• Sun. Oct 12th, 2025

நாட்டில் 4 வீதமானவர்கள், நினைவு இழப்பு நோயால் பாதிப்பு

Byadmin

Aug 28, 2023

இலங்கையின் சனத்தொகையில் 4 வீதமானவர்கள் நினைவு இழப்பு எனப்படும் டிமென்ஷியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மனநல வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

வயோதிபத்துடன் முளை செல்கள் அழிவதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக மனநல வைத்திய நிபுணர் என் குமாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

முறையான உணவுப் பழக்கவழக்கங்களை கடைப்பிடிப்பதன் மூலமும், தொடர்ந்து உடற்பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலமும், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்களை கட்டுப்படுத்துவதன் மூலமும் இந்த நிலைமையை குறைக்க முடியும் என மனநல வைத்திய நிபுணர் என் குமாநாயக்க தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *