• Sat. Oct 11th, 2025

பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹீத் ஸ்ட்ரீக் காலமானார்

Byadmin

Sep 3, 2023

சிம்பாப்வே தேசிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் சிறந்த ஆல்-ரவுண்டருமான ஹீத் ஸ்ட்ரீக் இன்று (03) தனது 49 வயதில் காலமானார். 
கடந்த சில ஆண்டுகளுக்கு மேலாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அவர், தென்னாப்பிரிக்காவில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு பெருங்குடல் மற்றும் கல்லீரல் பகுதிகளில் புற்றுநோய் பாதிப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது. 
இதுகுறித்து ஹீத் ஸ்ட்ரீக்கின் மனைவி தனது சமூக வலைத்தள பக்கத்தில்,”இன்று அதிகாலையில், செப்டம்பர் 3, 2023 ஞாயிற்றுக்கிழமை, என் வாழ்க்கையின் மிகப்பெரிய அன்பும், என் அழகான குழந்தைகளின் தந்தையும், தனது கடைசி நாட்களைக் கழிக்க விரும்பிய அவரது வீட்டிலிருந்து தேவதூதர்களுடன் அழைத்துச் செல்லப்பட்டார். அவர் அன்பு மற்றும் அமைதியாக மறைந்தார்” என பதிவிட்டு இருந்தார். 
சிம்பாப்வே அணிக்காக ஹீத் ஸ்ட்ரீக், இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் 65 டெஸ்ட் மற்றும் 189 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். சிம்பாப்வே அணியின் சிறந்த ஆல்-ரவுண்டராக ஜொலித்த இவர், உலக கிரிக்கெட்டிலும் சிறந்த ஆல்-ரவுண்டராக பார்க்கப்பட்டார். 

ஹீத் ஸ்ட்ரீக், டெஸ்ட் கிரிக்கெட்டில் மொத்தம் 216 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இதில், ஒரு இன்னிங்ஸில் 16 முறை 4 விக்கெட்டுகளையும், ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை 7 முறையும் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  
டெஸ்ட் போட்டிகளையும் தொடர்ந்து ஹீத் ஸ்ட்ரீக் ஒருநாள் போட்டிகளிலும் சிறந்து விளங்கினார். இவர், 29.82 சராசரியில் 239 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில், ஒரு இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளையும்,  ஒருமுறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனையை சிம்பாப்வே செய்துள்ளார். 
ஹீத் ஸ்ட்ரீக் துடுப்பாட்டத்தை பொறுத்தவரை அவர் டெஸ்டில் 1990 ஓட்டங்களும், ஒருநாள் போட்டிகளில் 2943 ஓட்டங்களையும் எடுத்துள்ளார். ஸ்ட்ரீக் டெஸ்டில் 1 சதம் மற்றும் 11 அரை சதங்கள் அடித்துள்ளார். அதே சமயம், ஒருநாள் போட்டிகளில் 13 அரைசதம் அடித்துள்ளார்.
கடந்த 2000 ஆம் ஆண்டில், சிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் ஹீத் ஸ்ட்ரீக்கை டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளுக்கு தலைவராக நியமித்தது. ஸ்ட்ரீக்கின் தலைமையின் கீழ், சிம்பாப்வே 21 டெஸ்ட் போட்டிகளில் 4ல் வென்று, 6 போட்டிகள் டிரா ஆன நிலையில், 11 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.
ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரை 68 போட்டிகளில் தலைவராக செயல்பட்ட இவர், 18 போட்டிகளில் வென்றுள்ளது. 47 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. ஸ்ட்ரீக்கின் மரணத்திற்குப் பிறகு, பல முன்னாள் மற்றும் தற்போதைய வீரர்கள் ட்வீட் மூலம் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *