• Tue. Oct 14th, 2025

தங்கத்தின் விலை 1,915 டொலர்களாக அதிகரிப்பு!

Byadmin

Sep 15, 2023

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் இன்று (15) மீண்டும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,915 அமெரிக்க டொலர்கள் 9 சென்ட்களாக பதிவாகியுள்ளது.

சீனாவின் பொருளாதார மீட்சிக்கான அறிகுறிகள் உலக சந்தையில் தங்கத்தின் விலை உயர்வில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக சந்தை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

சீனாவே உலகிலேயே தங்கத்தின் மிகப் பெரிய நுகர்வோர் என கூறப்படுகிறது.

சீனாவின் தொழிற்சாலை உற்பத்தி மற்றும் சில்லறை விற்பனையும் ஆகஸ்ட் மாதத்தில் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருப்பதாக நேற்று தெரிவிக்கப்பட்டது.

மேலும், அமெரிக்க டொலருக்கு நிகரான சீன யுவான் இரண்டு வாரத்தில் உச்சத்தை எட்டியது.

இதனால் தங்கத்தின் தேவை அதிகரிக்கும் போக்கு தங்கம் விலை உயர்வில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

யுவானுக்கு நிகரான டொலரின் மதிப்பு சரிந்ததால் தங்கத்தின் மீதான முதலீட்டாளர்களின் ஈர்ப்பு அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *