தொடர்பில் இலங்கை பயிற்றுவிப்பாளரின் இவ்வாறு கருத்து வெளியிட்டார்.
“மதீஷ பத்திரன மற்றும் துனித் வெல்லாலகே ஆகியோர் சிறப்பாக விளையாடினர்.
இருவரும் சர்வதேச கிரிக்கெட் களத்தில் புரட்சியை ஏற்படுத்தக்கூடிய இளம் வீரர்கள் என்பதை நிரூபித்துள்ளனர்.
எங்கள் அணியில் நல்ல பேட்ஸ்மேன்கள் மற்றும் நல்ல பந்து வீச்சாளர்கள் உள்ளனர்.
ஆனால் கிரிக்கெட் அணி சமமான திறமையுடன் சீராக முன்னேறுவது முக்கியம்.
இந்தியா போன்ற அணிகளை தோற்கடிப்பது பற்றி யோசிக்க வேண்டுமானால், அந்த நிலைத்தன்மை முக்கியம். “உலகக் கோப்பையில் நாங்கள் சிறந்த முறையில் விளையாட வேண்டும்,” என தெரிவித்தார்.