• Sun. Apr 12th, 2026

வனிந்து ஹசரங்கவிற்கு தொடரும் சிக்கல்

Byadmin

Sep 24, 2023

இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் வனிந்து ஹசரங்க பங்கேற்பது நிச்சயமற்றதாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எல். பி. எல் போட்டியின் போது காலில் உபாதைக்கு உள்ளான வனிந்து ஹசரங்கவுக்கு ஆசிய கிண்ண போட்டியில் இணைவதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்நிலையில் பயிற்சி தொடங்கிய பின்னர் வனிந்து ஹசரங்க மீண்டும் காயம் அடைந்துள்ளார்.
மருத்துவ அறிக்கையின்படி அவரால் உலகக் கிண்ண போட்டியில் விளையாட முடியாது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒருநாள் உலகக் கிண்ணத்திற்கான இலங்கை அணி நாளை (25) உத்தியோகபூர்வமாக பெயரிடப்படவுள்ளதுடன், இலங்கை அணி எதிர்வரும் 26ஆம் திகதி இரவு இந்தியா செல்லவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *