• Sun. Oct 12th, 2025

அநாகரீகமாக நடந்த சிறுவர் சிறுமிகளுக்கு எச்சரிக்கை

Byadmin

Sep 24, 2023

ஹோமாகம நகரில் இயங்கும் தனியார் நிறுவனமொன்றுக்கு சொந்தமான பூங்காவில் சிறிய மூடிய அறைகளில் சிறுவர் சிறுமிகள் அநாகரீகமாக நடந்து கொள்வதாக முறைப்பாடு கிடைத்திருந்தது.
அதன்படி இன்று (24) ஹோமாகம தலைமையக பொலிஸார் அந்த இடத்தை சுற்றிவளைத்துள்ளனர்.
குறித்த பூங்காவில் மூடப்பட்ட சிறிய அறைகளில் பாடசாலைச் செல்லும் சிறுவர்கள் அநாகரீகமாக நடந்து கொள்வதாக அப்பகுதியின் பெற்றோர்கள் மற்றும் மதத் தலைவர்கள் செய்த முறைப்பாட்டுக்கு அமைய ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தினால் பெறப்பட்ட தேடுதல் உத்தரவுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
அப்போது, ​​அறைகளில் அநாகரீகமாக நடந்து கொண்ட சுமார் 24 இளம் ஜோடிகளை பொலிஸார் பொறுப்பேற்றனர்.
பின்னர், அனைத்து சிறுவர்களையும் அழைத்து, அறிவுரைகள் வழங்கி எச்சரித்த பொலிஸார், அவர்களின் பாதுகாவலர்களுக்கு அழைப்பு விடுத்து ஒப்படைத்தனர்.
அவர்களில் பலர் மேலதிக வகுப்புகளுக்கு செல்வதாக கூறி அங்கு சென்றுள்ளமை தெரியவந்தது.
சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்ட போது பூங்காவின் உரிமையாளர் வந்து காவற்துறை அதிகாரிகளுடன் காரசாரமாக உரையாடியதாகவும் இதனால் பதற்றம் ஏற்பட்டதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *