300 மில்லியன் ரூபா பெறுமதியான 4 கிலோ கிராம் கொக்கேன் போதைப் பொருளை கொண்டுவந்த கென்யா நாட்டவர் விமான நிலையத்தில் கைது.
24 ம் திகதி மாலை தோகாவிலிருந்து QR 654 இலக்க விமானத்தில், கட்டுநாயக்க விமான நிலையம் வந்த 34 வயதான கென்யா நாட்டவர் சுங்க போதைப் பொருள் கட்டுப்பாட்டு பிரிவினர் தடுத்து பரிசோதித்த போது, அவரின் பயணப்பையில் 3 பிஸ்கட் டின்களில் சூசகமான முறையில் மறைத்து வைத்திருந்த கொக்கேன் போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.
சட்ட விரோதமாக நாட்டிற்குள்கொண்டுவர முயற்சித்த 4 கிலோ கிராம் கொக்கேனின் சந்தைப் பெறுமதி 300 மில்லியன் ரூபா என சுங்க பேச்சாளர் சுங்க பணிப்பாளர் சீவலி அருக்கொட தெரிவித்தார்.
இவர் இதியோப்பியாவின் அடிஸ் அபாபா விமான நிலையத்தில் இருந்து, கட்டார் நாட்டின் தோகா விமான நிலையம் ஊடாக, கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை சுங்க அதிகாரிகளின் விசாரணையின் பின்னர் மேலதிக விசாரணைக்காக பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.