• Tue. Oct 14th, 2025

சர்வதேச மருத்துவப் பட்டப்படிப்பிற்கு இடம்!

Byadmin

Oct 10, 2023


சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் வழங்கப்படுகின்ற மருத்துவப் பட்டப்படிப்பை இலங்கையில் ஏற்றுக்கொள்வதற்கு அடிப்படையாகக் கொள்ள வேண்டிய தரநியமங்கள் மற்றும் அளவுகோல்கள் உள்ளடங்கிய தேசிய கொள்கையொன்றைத் தயாரிப்பதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அத்துடன் சமகாலத் தேவைகளுக்குப் பொருத்தமான வகையில் பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காகவும் பிரதமரின் செயலாளர் தலைமையில் குழுவொன்றை நியமிப்பதற்காக அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 
அதற்கமைய நியமிக்கப்பட்டுள்ள குழுவின் பரிந்துரைகள் உள்ளடங்கலான அறிக்கையின் அடிப்படையில் சர்வதேச தரப்படுத்தலுக்கமைய இலக்கம் 01 தொடக்கம் 1000 வரையான பல்கலைக்கழகங்களால் வழங்கப்படுகின்ற மருத்துவப் பட்டங்களை எமது நாட்டில் அங்கீகரிப்பதற்கு இயலுமாகும் வகையில் தேவையான சட்டரீதியான ஏற்பாடுகளை விதிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக  ஜனாதிபதி மற்றும் சுகாதார அமைச்சரும் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *