• Tue. Oct 14th, 2025

A/L பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியிடப்பட்டது

Byadmin

Oct 11, 2023

2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

பல தரப்பினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை கருத்திற்கொண்டு, எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவிருந்த 2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை, அடுத்த வருடம் ஜனவரி மாதத்திற்கு பிற்போடப்பட்டது.

அதன்படி, குறித்த பரீட்சைகளை எதிர்வரும் ஜனவரி மாதம் 4ஆம் திகதி முதல் நடத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இந்தநிலையில், 2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை நேற்றைய தினம் பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *