• Sun. Oct 12th, 2025

ஒன்லைன் வேலை வாய்ப்பு – 1 கோடி மோசடி – நபர் கைது

Byadmin

Oct 14, 2023


ஒன்லைன் மூலம் வேலை வாய்ப்பு தருவதாக கூறி சுமார் 1 கோடி ரூபாய் மோசடி செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவிற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் 94 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாவை மோசடி செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் 3 வங்கிக் கணக்குகளில் 72 இலட்சம் ரூபா பணம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கரந்தெனிய, தெனகொட பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் கல்கிசை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *