• Wed. Dec 3rd, 2025

கொழும்பு தாமரை கோபுரத்தில் சுழலும் உணவகம்!

Byadmin

Dec 6, 2023

கொழும்பு தாமரை கோபுரத்தில் முதலாவது சுழலும் உணவகத்தை எதிர்வரும் 09 ஆம் திகதி திறப்பதற்கு தனியார் நிறுவனம் ஒன்று தீர்மானித்துள்ளது.
இதன்படி, சிட்ரஸ் ஹோட்டல் குழுமத்துடன் இணைந்து இந்த உணவகம் பொதுமக்களுக்கு திறக்கப்படவுள்ளது.
கொழும்பு தாமரை கோபுரத்தில் உள்ள சுழலும் உணவகம், தெற்காசியாவின் மிக உயரமான இடத்தில் அமைந்துள்ள முதல் சுழலும் உணவகமாக கருதப்படுகிறது.
இதனை பொதுமக்களுக்கு திறந்து வைப்பது குறித்து அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பும் இன்று நடைபெற்றிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *