அக்குரெஸ்ஸ – வெலிக்கெட்டிய, மாமேதெரிஹேன பிரதேசத்தில் கணவனும் மனைவியும் கல் குகைக்குள் வசித்து வருகின்றனர்.
53 வயதான சந்திரசிறி, 38 வயதான அயேஷ ஆகியோரே கல் குகையில் வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கு துணையாக மூன்று நாய்கள் மாத்திரமே உள்ளன.
சிறு வயது முதல் வறுமையில் வாழ்ந்து வந்த சந்திரசிறி கட்டிட நிர்மாண உதவியாளராக மாத்தறை வெஹேரஹேனவில் இருந்து கொழும்புக்கு வந்து அயேஷாவை சந்தித்துள்ளார்.
அயேஷாவை திருமணம் செய்து கொண்ட சந்திரசிறி அவரை மாத்தறையில் உள்ள தனது தாய் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
வீட்டில் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால், அக்குரஸ்ஸ பிரதேசத்திற்கு அழைத்து வந்து, கூலி தொழில் செய்து ஆங்காங்கே வசித்து வந்துள்ளனர்.
வசிப்பதற்கு இருப்பிடம் இல்லாத காரணத்தினால், மூன்று மாதங்களுக்கு முன்னர் சந்திரசிறி, தனது மனைவியுடன் கல் குகையில் குடியேறியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் வெளியாகியுள்ள வீடியோ..