முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட ஆகியோர் குற்றவாளிகள் என, கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
2015ம் ஆண்டு தொலைத் தொடர்பு ஆணைக்குழுவுக்கு சொந்தமான 600 மில்லியன் ரூபாவை பயன்படுத்தி சில் துணிகளை விநியோகம் செய்ததாக இவர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இதன்படி, இன்று இந்த வழக்கில் இவர்களை குற்றவாளிகள் என நீதிமன்றம் அடையாளப்படுத்தியுள்ளதுடன் 3 வருட சிறை தண்டனையும் அறிவிக்கபட்டுள்ளது.