இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள ரோஹிங்யா நாட்டு அகதிகளை அங்கிருந்து வெளியேற்ற இந்தியா அரசு நடவடிக்கை எடுக்க முயற்சிகளை முன்னெடுத்துள்ளதாக சர்வதேச ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று முந்தினம் ரோஹிங்யா அகதிகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள உள்துறை அமைச்சர், கிரண் ரிஜ்ஜு ..
“இந்தியாவில் தங்கியிருக்கும் ரோஹிங்யா அகதிகள் சட்டவிரோத குடியேற்ற வாசிகளாக இங்கு தங்கியுள்ளனர். அவர்கள் இந்தியாவில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் .
சில மனித உரிமை ஆர்வளர்கள் அவர்களுக்கு இங்கு அடைக்களம் கொடுக்க வேண்டும் என கூறுகிறார்கள்.
நாம் அவர்களை கொலை செய்ய அல்லது கடலில் கொண்டு போய் தள்ளுமாறு கூறவில்லை எமது நாட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்றே கூறுகிறோம்” என கூறியிருந்தார்.
அதேவேளை மியன்மார் சென்றுள்ள மோடி மற்றும் சுகியிடையே இந்தியாவில் தஞ்சம் அடைந்துந்துள்ள ரோஹிங்யா அகதிகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.