• Sun. Oct 12th, 2025

குடியேற்றத்தை குறைக்கும் கனடா!

Byadmin

Jan 14, 2024

கனடாவில் அதிகரித்து வரும் வேலையின்மை மற்றும் வீட்டு நெருக்கடிகளுக்கு மத்தியில் அமைச்சர் மார்க் மில்லர், அடுத்த மாதங்களில் கனடாவில் வசிக்கக்கூடிய வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவது குறித்து ஆராய்வதாக அறிவித்தார்.
ஆனால் நிர்வாகம் எவ்வளவு குறைக்க திட்டமிட்டுள்ளது என்பதை அமைச்சர் தெரிவிக்கவில்லை என வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
இந்த ஆண்டு 4,85,000 புதிதாக குடியேறியவர்களும், 2025 மற்றும் 2026 ஆகிய இரண்டிலும் 5,00,000 பேர் புதிதாக வருபவர்கள் உள்ளடங்கும்.
இதற்கு முன்பு அரசாங்க ஊழியர்கள், இந்தக் கொள்கைகளால் வீடு வாங்கும் விலையில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து அரசாங்கத்தை எச்சரித்துள்ளனர்.
மேலும், சர்வதேச மாணவர்கள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் போன்ற தற்காலிக குடியிருப்பாளர்களால் வீட்டுப் பற்றாக்குறை அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டின் பாதியில் மட்டுமே 3 லட்சத்துக்கும் அதிகமான தற்காலிக குடியிருப்பாளர்கள் கனடாவிற்கு வந்துள்ளனர்.
எனவே சர்வதேச மாணவர் வரம்பு பற்றிய அரசாங்கத்தின் திட்டம், வீட்டுப் பிரச்சனையை எளிதாக்க முயற்சிக்கிறது என வௌிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *