தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்துவதற்காக சீனி, உப்பு, எண்ணெய் போன்றவற்றுக்கு வரி விதிக்க வேண்டுமென சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் 2025ம் ஆண்டளவில் நோய்களை பெருமளவில் கட்டுப்படுத்தலாமென்றும் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார்.
புதிதாக ஆயிரத்து 614 தாதி பயிலுனர்கள் பயிற்சிக்காக சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளனர். இதன் போது இந்தச் சேவையில் நியமனம் பெறும் 888 பேருக்கு நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு நேற்று(11) அலரி மாளிகையில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.