மாலபே, சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி குறித்த பிரச்சினையை தீர்ப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி குழுவின் நிலைப்பாட்டுக்கு எதிராக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) மாவட்ட ரீதியான போராட்டம் இன்று(12) முதல் ஆரம்பமாகிறது.
அதன்படி, இன்று(12) முதல் எதிர்வரும் 15ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியாக அரச மருத்துவ அதிகாரிகள், சேவைப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக நேற்று(11) அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்திருந்தது.
இதற்கமைய இன்று(12) யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, நுவரெலியா பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.