• Mon. Oct 13th, 2025

யுக்திய நடவடிக்கையில் மேலும் பலர் கைது

Byadmin

Feb 10, 2024

கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில்  முன்னெடுக்கப்பட்ட யுக்திய நடவடிக்கையில்  663 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 547 சந்தேகநபர்களும் குற்றவியல் பிரிவுக்கு அனுப்பப்பட்டிருந்த பட்டியலில் இருந்த 116 சந்தேகநபர்களும் இதில் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர்களிடம் 175 கிராமும் 191 மில்லி கிராம் ஹெராயினும், 171 கிராமும் 197 மில்லி கிராம் ஐஸூம், 515 கிராமும்  538 மில்லி கிராம் கஞ்சாவும், 807 கஞ்சா செடிகளும், 77 கிராமும் 200 மில்லி கிராம் மாவாவும், 296 போதை மாத்திரைகளும், 85 கிராம் மதன மோதகம் ஆகியவையும் கண்டுபிடிக்கப்பட்டன.

போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 547 சந்தேக நபர்களில் 04 சந்தேக நபர்கள் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் மற்றும் பொலிஸ் விசேட பணியகம் ஆகியவற்றின் பட்டியலில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தடுப்பு காவல் உத்தரவின் பேரில் இரண்டு சந்தேக நபர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், போதைக்கு அடிமையான மேலும் இரண்டு பேர் புனர்வாழ்வு மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

மேலும், 14 சந்தேக நபர்களுக்கு போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணையும், 95 பேருக்கு போதைப்பொருள் அல்லாத குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணைகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கைரேகைகள் மூலம் அடையாளம் காணப்பட்ட 03 சந்தேக நபர்களும், குற்றச் செயல்களுக்காக தேடப்பட்டு வரும் 04 சந்தேக நபர்களும் இந்த நடவடிக்கைகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *