நாய் கடித்து 7 நாள் வயதுள்ள சிசுவொன்று பரிதாபமாக உயிரிழந்த சம்பவமொன்று ஹபரணை நாமல்புர பகுதியில்இடம் பெற்றது.
வீட்டில் தூங்கியி ருந்த போதே இந்த சிசுவை நாய் கடித்துள்ளது.
அவசரமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி சிசு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் பற்றி தெரிய வருவதாவது:
நேற்று முன்தி னம் இரவு 7 மணியளில் சிசுவை தரையில்
வைத்து நுளம்பு வலையினால் மூடி விட்டு தாய் வேறு பக்கமாக சென் றுள்ளார்.
இந்த நிலையில் வீட்டிற்குள் புகுந்த பக்கத்து வீட்டு நாய் சிசுவை கடித்துள்ளது. குழந்தை வீரிட்டழும் சத்தத்திற்கு ஓடிவந்த தாய் அதனை வாரி எடுத் துள்ளார்.
படுகாயமடைந்த இந்த ஏழு நாள் சிசு ஹபரணை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பின்னர் தம்புள்ள ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டுள்ளது.
பின்னர் சிகிச்சை பயனின்றி சிசு இறந்துள்ளது. இறந்த சிசுவுக்கு இரு சகோதரிகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.