• Sat. Oct 11th, 2025

வாட்ஸ்அப் பயனர்களுக்கான புதிய அம்சம்

Byadmin

Apr 25, 2024

அண்மையில் செயற்கை நுண்ணறிவு (AI) வசதியை அறிமுகம் செய்துள்ள வாட்ஸ்அப் செயலி தற்போது இணையம் இல்லாமல் ஆவணங்களை மற்றவர்களுடன் பகிரும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.இணையவசதி இல்லாமல், புளூடூத் உதவியுடன் Share it மற்றும் Near By Share போன்ற செயலிகள் மூலம் புகைப்படங்கள் மற்றும் திரைப்படங்களை அனுப்பமுடியும்.

அந்தவகையில் இப்போது வாட்ஸ்அப் செயலியும் இந்த சேவைகளை வழங்குகிறது.

அத்துடன் ஆவணங்களை விரைவாகவும் பாதுகாப்பாகவும் அனுப்பவும் இந்த அம்சம் பயனுள்ளதாக அமையும் என்றும் இந்த அம்சத்தை செயல்படுத்த வாட்ஸ்அப் பயனர்கள் WhatsApp System Files, Photo Gallery அணுகல் போன்ற அனுமதிகளை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இந்த அம்சம் தற்போது beta பயனர்களால் சோதனை முறையில் சோதிக்கப்பட்டு வரும் நிலையில் இது விரைவில் அனைத்து WhatsApp பயனர்களுக்கும் கிடைக்கும் என மெட்டா நிறுவனம் கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *