• Wed. Oct 15th, 2025

ஹர்திக் பாண்டியாவுக்கு போட்டித் தடை!

Byadmin

May 18, 2024

மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவர் ஹர்திக் பாண்டியாவுக்கு போட்டித்த தடை மற்றும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணி நேற்று பங்கேற்ற தனது இறுதி போட்டியில் குறைந்த பந்துவீச்சு வேகத்தை பேணியதன் காரணமாகும் இந்த தடை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஹர்திக் பாண்டியாவுக்கு அபராதமும் ஒரு போட்டியில் விளையாட தடையும் விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹர்திக் பாண்டியாவுக்கு இந்த சீசன் முடிந்துவிட்டது. மும்பை அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறவில்லை. இதனால் அடுத்த ஆண்டு ஐ.பி.எல்.லில் அவரது முதல் ஆட்டத்தில் விளையாட முடியாது.
மேலும் அந்த அணியின் ஏனைய வீரர்களுக்கு 12 லட்சம் இந்திய ரூபாய் அல்லது போட்டி கட்டணத்தில் 50% அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
05 தடவைகள் ஐபிஎல் பட்டத்தை வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணியால் இத்தொடரில் திட்டமிடப்பட்ட 14 போட்டிகளில் 04 போட்டிகளில் மாத்திரமே வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *