• Mon. Oct 13th, 2025

இவர் தொடர்பில் தகவல் வழங்கினால் பணப்பரிசு

Byadmin

May 25, 2024

விசேட விசாரணைக்காக கைது செய்ய வேண்டிய சந்தேகநபர் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் அறிந்தால் அறிவிக்குமாறு பொலிஸ் மா அதிபர், பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 
சந்தேகநபர் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சந்தேகநபர், தெமட்டகொடை பிரதேசத்தை சேர்ந்த ஜெராட் புஷ்பராஜா ஒஸ்மான் ஜெராட் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த சந்தேக நபர் தொடர்பில் சரியான தகவல்களை வழங்குவோருக்கு 20 இலட்சம் ரூபா சன்மானம் வழங்கப்படும் எனவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
தகவல் தெரிந்தால் – 071-8591753 அல்லது 071-8591774 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்கவும்.
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *